பஹ்ரைனில் கலவரத்தை ஏற்படுத்திய கிம் கர்தஷியான் வருகை!

கிம் கர்தஷியான் என்றால் உருகாதவர்களே இல்லை. கம்ப்யூட்டரில் பரவும் வைரஸ் கூட கிம் கர்தஷியான் என்ற பெயரில்தான் பெருமளவில் உருவாக்கப்பட்டு அனுப்ப்படுகிறதாம். அந்த அளவுக்கு கிம்முக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள்.
இந்த நிலையில், கிம் கர்தஷியான் பஹ்ரைனுக்கு வந்துள்ளார். அரபு நாடான பஹ்ரைனுக்கு கவர்ச்சி தாரகையான கிம் வந்துள்ளதற்கு அங்குள்ள பழமைவாதிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். போராட்டத்திலும் குதித்தனர். 50க்கும் மேற்பட்டோர் கூடி கிம்முக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து உடனடியாக விரைந்து வந்த கலவரத் தடுப்புப் போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தினரைக் கலைத்தனர்.
பஹ்ரைனின் ரிபா நகரில், மில்லியன்ஸ் ஆப் மில்க் ஷேக்ஸ் என்ற கிளையை கிம் கர்தஷியான் திறந்து வைப்பதற்காக வந்திருந்தார். திறப்பு விழாவுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் இந்தக் கலவரம் நடந்தது. கூட்டத்தினரை அப்புறப்படுத்திய பின்னர் பலத்த பாதுகாப்புடன் கிம் அழைத்து வரப்பட்டார்.
கடந்த வாரம்தான் குவைத் போயிருந்தார் கிம். அங்கும் இந்த மில்க் ஷேக் கடையைத் திறந்து வைத்தார். இந்த மில்க் ஷேக், கிம் கர்தஷியானின் சொந்தத் தயாரிப்பு என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications