For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிலிப்பைன்ஸை உலுக்கிய 'போப்பா' சூறாவளி- 300க்கும் மேற்பட்டோர் பலி! லட்சக்கணக்கானோர் இடப்பெயர்வு!

By Mathi
Google Oneindia Tamil News

நியூபேட்டன்: பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய "போப்பா" சூறாவளிக்கு சுமார் 300க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கின்றனர். சுமார் 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் தென்சீனக் கடலை நோக்கி "போப்பா" என்ற சூறாவளி நேற்று முன் தினம் வீசியது. மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இந்த சூறாவளியால் நியூபேட்டன் மலைப் பகுதியில் மின்டனா தீவில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மின்சாரம், தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இந்த சூறாவளியில் சிக்கி 300க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் பல நூறு பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

சுமார் 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கபப்ட்டிருக்கிறதாக அந்த நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

English summary
Nearly 200,000 people are homeless and more than 300 dead after the Philippines suffered its worst typhoon this year, authorities said Thursday, reaching out for international aid to cope with the scale of the disaster.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X