For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெங்குவை ஒழிக்க ஹோமம்: கனிமொழியின் பேச்சால் ராஜ்யசபாவில் அதிமுகவினர் அமளி

By Siva
Google Oneindia Tamil News

Kanimozhi
டெல்லி: தமிழகத்தில் டெங்குவை ஒழிக்க அதிமுக அரசு ஹோமம் நடத்துகிறது என்று ராஜ்யசபாவில் கனிமொழி தெரிவித்ததை கண்டித்து அதிமுக எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர்.

நேற்று ராஜ்யசபாவில் தமிழகத்தில் டெங்கு பரவுவது குறித்த விவாதம் நடந்தது. அப்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில்,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதை தடுக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக டெங்குவை ஒழிக்க அதிமுக அரசு மருத்துவமனையில் ஹோமம் நடத்துகிறது என்றார்.

கனிமொழியின் பேச்சைக் கேட்ட அதிமுக எம்.பி.க்கள் மைத்ரேயன், இளவரசன் ஆகியோர் ஆத்திரமடைந்தனர். கனிமொழியின் பேச்சைக் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். பதிலுக்கு அதிமுகவினரைக் கண்டித்து திமுகவினர் கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சலும், குழப்பமுமாக இருந்தது.

English summary
DMK MP Kanimozhi accused ADMK government of failing to prevent the spread of dengue in Tamil Nadu during a session in Rajya Sabha. She mentioned about ADMK government conducting homam to control dengue. ADMK MPs created ruckus condemning her speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X