For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாங்க சொல்லவே இல்லையே? மானிய சிலிண்டர் பற்றி வீரப்பமொய்லி விளக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Veerappa Moily
டெல்லி: மானிய விலையில் வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6ல் இருந்து 9 ஆக உயர்த்தி வழங்குவது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை என்று தேர்தல் கமிஷனிடம் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி விளக்கம் அளித்துள்ளார்.

மானிய விலையில் ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு 9 சிலிண்டராக உயர்த்தப்படும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை அமைச்சர் வீரப்ப மொய்லி செவ்வாய் கிழமை மாலை தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து குஜராத், இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது போன்ற அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வீரப்பமொய்லிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

இந்நிலையில் மானிய விலையில் கியாஸ்சிலிண்டரின் எண்ணிக்கையை உயர்த்துவது பற்றி மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், அவ்வாறு முடிவெடுக்கப்பட்டால் அது குறித்து நிச்சயம் தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்கப்படும் என்றும், தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்காமல் எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது என்றும் வீரப்பமொய்லி விளக்கம் அளித்துள்ளார்.

English summary
Oil minister Veerappa Moily has replied to the Election Commission which directed that the Centre stall any move to increase the cap on subsidised LPG cylinders from six to nine per household.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X