For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கிகள் மூலம் மானியம் என்பது என் ஐடியா- ராகுல் திருடிவிட்டார்: சந்திரபாபு மகன் லோகேஷ்!

By Mathi
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: வங்கிகள் மூலம் பயனாளிகளுக்கு மானியம் கொடுக்கும் திட்டம் என்பது தமது திட்டம் என்றும் அதை ராகுல் காந்தி திருடிவிட்டார் என்றும் புதுக்குண்டை போட்டிருக்கிறார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ்.

சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷுக்கு 30 வயதுதான் ஆகிறது. ஆனால் தெலுங்குதேசம் கட்சியில் தீவிரமாக 'தலை' காட்டி வருகிறார். எதிர்வரும் லோக்சபா தேர்தலில் லோகேஷ் போட்டியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.

தற்போது சந்திரபாபு நாயுடு நடத்தி வரும் பாதயாத்திரையிலும் லோகேஷ் முக்கியப் பங்காற்றி வருகிறார். இந்நிலையில் "வங்கிகள் மூலம் பயனாளிகளுக்கு மானியம்" என்ற மத்திய அரசு அறிவித்திருக்கும் திட்டம், என்னுடைய திட்டம்.. இதை 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது தெலுங்குதேசம் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறேன்... இதை காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி திருடிவிட்டார் என்று புதிய குண்டை வீசியிருக்கிறார் லோகேஷ்.

வாரிசுகள் மோதுகின்றன...!

English summary
TDP president N Chandrababu Naidu’s son Lokesh cried hoarse on Saturday over the Congress “stealing” his idea and coming up with the cash transfer scheme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X