For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மன்னிப்பு கேட்கவேண்டும்: பிரதமருக்கு 11 வயது பள்ளி மாணவி நோட்டீஸ்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: "தகவல் அறியும் உரிமை சட்டத்தை பெரும்பாலானோர் தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டிய பிரதமர் மன்மோகன்சிங் அதற்கான ஆதாரங்களை தர வேண்டும்; இல்லையேல் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என 11 வயது பள்ளி மாணவி பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

"காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?' என, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு வட்டாரங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனிப்பட்ட மனிதர்களின் மருத்துவ செலவு பற்றி தகவல் கேட்பதா என காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர்.

இதற்கிடையில் அக்டோபர் 12ம் தேதி டில்லியில் நடந்த தகவல் உரிமை சட்ட மாநாட்டில் பேசிய பிரதமர், மன்மோகன் சிங், "தகவல் பெறும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்தும் சிலர் தேவையே இல்லாத தகவல்களையும் தனிப்பட்ட தகவல்களையும் ஒன்றுக்குமே உதவாத தகவல்களையும் கேட்கின்றனர். ஆம்னி பஸ் அளவிற்கு அவர்கள் கேட்கும் தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது'" என கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதற்கு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த தகவல் உரிமை சட்ட ஆர்வலர் 11 வயது ஊர்வசி சர்மா என்ற பள்ளி மாணவி பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு தன் வழக்கறிஞர் மூலம் திங்கட்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீசில் சிறுமி ஊர்வசி, அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட நான் நீங்கள் தெரிவித்த கருத்துகளால் மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இந்த நோட்டீஸ் மூலம் தெரிவிப்பது என்னவென்றால் எதன் அடிப்படையில் நீங்கள் அவ்வாறு கூறினீர்கள்? அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.இல்லையேல், இன்னும் 60 நாட்களுக்குள் அவ்வாறு பேசியதற்காக வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதைச் செய்ய தவறினால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சிறுமி அனுப்பியுள்ள நோட்டீசில் தெரிவித்துள்ளார்.

English summary
In response to Prime Minister Manmohan Singh’s comments on the alleged misuse of the Right to Information (RTI) Act, an 11-year old girl, who is a well-known RTI activist, has sent Singh a legal notice, asking him to either furnish documentary evidence to corroborate his remarks or face legal action.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X