For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்: கடந்த தேர்தலை விட 2 தொகுதிகளை இழந்து 115ல் பாஜக வெற்றி-காங்.க்கு 61

By Mathi
Google Oneindia Tamil News

Narendra Modi
அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் 115 தொகுதிகளை பாரதிய ஜனதா வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளில் வென்றுள்ளது.

இன்று காலை வாக்குகள் என்ணிக்கை தொடங்கிய போது பாஜகவும் காங்கிரஸும் சம எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்தன. தொடர்ந்து கேசுபாய் பட்டேலின் குஜராத் பரிவர்த்தன் கட்சி செல்வாக்கு மிக்க செளராஷ்டிரா பகுதியில் கணிசமான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னணி வகித்தது. இதனால் பாஜக அதிர்ச்சியடைந்தது. ஆனால் போகப் போக பாஜகவுக்கு நிம்மதி கொடுக்கும் வகையில் முன்னிலை கிடைத்தது!.

ஒட்டு மொத்த எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சியைவிட காங்கிரஸ் கட்சி பின்னடைவாக இருந்தாலும் வாக்கு சதவீதம் சற்று அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. கேசுபாய் பட்டேலின் கட்சிதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சி கடந்த முறை வென்ற 117 தொகுதிகளைவிட குறைவாகவே 115 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது இதேபோல் கடந்த தேர்தலைவிட கூடுதல் தொகுதிகளைப் பெறக் கூடும் என்ற நிலை காங்கிரஸ் கட்சிக்கு தொடக்கத்தில் இருந்தே இருந்து வந்தது. கடந்த முறை 59 தொகுதிகள் பெற்ற காங்கிரஸ் 61 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்களும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஒரு இடமும் கிடைத்திருக்கிறது.

குஜராத் தேர்தல் முடிவு விவரம்:

பாஜக - 115

காங்கிரஸ்- 61

தேசியவாத காங்கிரஸ்- 2

ஐக்கிய ஜனதா தளம்- 1

இதர- 3 (இதில் குஜராத் பரிவர்த்தன் கட்சி 2)

English summary
Gujarat ex CM Kesubhai Patel's new party GPP gave shock to BJP in assembly polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X