இன்று காலை 10.10 மணிக்கு பூமிக்கு மிக அருகில் வரும் சூரியன்

பூமி சூரியனைச் சுற்றி வருகையில் குறிப்பிட்ட நாளில் அவை இரண்டும் மிக அருகிலும், குறிப்பிட்ட நாளில் மிகவும் தூரத்திலும் இருக்கும். இந்நிலையில் இன்று காலை 10.10 மணிக்கு சூரியன் பூமிக்கு மிகவும் அருகில் அதாவது 147 மில்லியன் கிமீ தொலைவில் வருகிறது.
ஒவ்வொரு ஜனவரி மாதமும் சூரியன் பூமிக்கு மிக அருகில் வரும். அதே போன்று ஒவ்வொரு ஜூலை மாதமும் சூரியன் பூமிக்கு வெகு தூரத்தில் செல்லும். இன்று பூமிக்கு மிக அருகில் வரும் சூரியன் வரும் ஜூலை மாதம் 5ம் தேதி வெகு தொலைவில் செல்கிறது.
அனைத்து கோள்களுமே சுழற்ச்சியின்போது சூரியனுக்கு அருகில் வருவதும், தொலைவில் செல்வதும் இயல்பே. சூரியன் என்னதான் பூமிக்கு அருகில் வந்தாலும் வெப்பம் அதிகமாகாமல் இருப்பதற்கு பூமியின் அமைப்பே காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.
இன்று காலை 10.10 மணிக்கு நடக்கும் அதிசய நிகழ்வைக் காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications