நடுவானில் கழன்ற சக்கரம்.. விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய பயிற்சி விமானி
மெல்பர்ன்: கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்குச் சென்ற விமானத்தின் டயர் நடுவானில் கழன்று விழுந்தது. எனினும் விமானியின் சாமர்த்தியத்தால் அந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
மங்களூர் விமான நிலையத்தில் இருந்து சிறிய விமானம் ஒன்று மெல்போர்ன் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தை சீனாவைச் சேர்ந்த 21 வயதான பயிற்சி விமானி ஒருவர் ஓட்டிச்சென்றார். மெல்போன் அருகே விமானம் சென்று கொண்டிருந்த போது நடுவானில் விமானத்தின் சக்கரம் கழன்றுவிட்டது. இதனையடுத்து விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
எரிபொருள் தீரும் வரை கிட்டத்தட்ட 2 மணி நேரம் வட்டமடித்த அந்த விமானம் ஓடுதளத்தில் மோதி வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. ஆனாலும் மிகவும் சாதுர்யமாக செயல்பட்ட விமானி, மெல்போர்ன் ஓடுதளத்தில் உராய்ந்தபடி புல்வெளியில் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விமானத்திற்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
விமானத்தை ஓட்டிய அந்த பயிற்சி விமானி, ஏற்கனவே சீனாவில் 120 மணி நேரம் விமானத்தை தனியாக ஓட்டிய அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications