For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமதாஸின் 'சாதி' அஸ்திரத்துக்கு எதிர்ப்பு- முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி அரசியலைவிட்டே விலகல்!

By Mathi
Google Oneindia Tamil News

Ponnusamy
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமாதாஸ் கையில் எடுத்திருக்கும் 'சாதி' ஆதரவு நிலைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அக்கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி வெளியேறி உள்ளார். பாமகவில் இருந்து விலகிய அவர் அரசியலை விட்டே ஒதுங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ் அண்மைக்காலமாக சாதிய அமைப்புகளை ஒன்றிணைத்து காதல் திருமணங்களுக்கு எதிராகவும் தலித்துகளை விமர்சித்தும் பேசி வருகிறார். இதனாலேயே அவர் ராமதநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமதாஸின் இந்த நடவடிக்கையை அனைத்து கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் சொந்தக் கட்சியிலே ராமதாஸுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாமகவின் நிர்வாகக் குழு உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்னுசாமி ராமதாஸின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து கட்சியைவிட்டுமின்றி அரசியலைவிட்டே வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார்.

1999-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 2 முறை சிதம்பரம் லோக்சபா தொகுதி எம்.பி.யாக பொன்னுசாமி இருந்தார். அவர் 99 முதல் 2001 வரை பெட்ரோலிய துறை இணை அமைச்சராக பதவி வகித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது கொள்கைகளையும், குணத்தையும் வெளியே வைத்து விட்டு கட்சி பணிகளில் ஈடுபட்டு 15 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் சுற்றி வந்தேன். சில ஆண்டுகளாக டாக்டர் ராமதாஸ் எடுத்து வரும் நிலைகள் என் கருத்துக்கு முரணாக இருந்தது. ஆனாலும் நட்பை மனதில் வைத்து தாங்கி வந்தேன். ஆனால் சமுதாய ரீதியாக எடுக்கப்பட்ட கட்சியின் சில நிலைபாடுகள் எனக்கு ஏற்புடையதாக இல்லை. இதை பா.ம.க. நிர்வாக குழுவிலும், அன்புமணி ராமதாசிடமும் தனியாக விளக்கி கூறி இருந்தேன்.

குறிப்பாக வன்கொடுமை தடுப்பு சட்டம் பற்றியும், காதல் திருமணம் பற்றியும் கட்சியின் கருத்துக்கு எதிரான கருத்தை நான் கொண்டு உள்ளதால் இனி அதில் நீடிக்க விரும்பவில்லை. எனவே அரசியலில் இருந்து விலகுகிறேன். இதுவரை கட்சியில் என்னோடும், எனக்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

மேலும் தாம் எந்த கட்சிக்கும் போக மாட்டேன். சமூக பணியிலும், எழுதுவதிலும் தமது கவனத்தை செலுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொன்னுச்சாமி தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Forumer Unions State Minister Ponnusamy quit PMK against the Dr. Ramadoss's Caste politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X