செவ்வாய் கிரகத்தில் 1,500 கி.மீ நீள வறண்ட நதி கண்டுபிடிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Mars River
லண்டன்: செவ்வாய் கிரகத்தில் 1,500 கிலோமீட்டர் நீளமான வறண்ட நதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய மார்ஸ் எக்ஸ்பிரஸ் சேட்டிலைட் என்ற செயற்கைக் கோள் இந்த நதியைப் படம் பிடித்துள்ளது.

கிட்டத்தட்ட 6 கி.மீ அகலம் கொண்ட இந்த நதியின் சில பகுதிகள் 1 கி.மீ. அளவுக்கு ஆழமாக உள்ளன. இதற்கு பல கிளை நதிகளும் உள்ளன.

1.8 பில்லியன் ஆண்டு முதல் 3.5 பில்லியன் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த நதி ஓடியிருக்க வேண்டும் என்று தெரியவந்துள்ளது.

இந்த நதிக்கு 'Reull Vallis' என்று பெயர் சூட்டியுள்ளது ஜரோப்பிய விண்வெளி ஆய்வு மையம்.

இப்போது இந்த கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு அனுப்பிய க்யூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலமும் அது தரையிறங்கிய கேல் கிரேட்டர் என்ற இடத்துக்கு அருகே ஒரு பழமையான கால்வாய் போன்ற பகுதியை அடையாளம் கண்டதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த கிரகத்தில் ஒரு காலத்தில் நீரோ அல்லது ஏதோ ஒரு திரவமோ இருந்துள்ளதும், அது ஆறாக ஓடியதும் நிரூபணமாகியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The European Space Agency announced Thursday that it has taken high-definition pictures of an ancient river nearly 1,000 miles long on Mars. According to the report, the "striking" river also has "numerous tributaries" and is believed to be more than 4 miles wide and nearly 1,000 feet deep at some points. The agency believes that the river was carved by water between 1.8 and 3.5 billion years ago and went dry due to evaporation. The agency has named the river Reull Vallis. The photos were taken with the ESA's Mars Express satellite last year. This image shows the Reull Vallis, a nearly 1,000 mile long river on Mars discovered by the European Space Agency.
Please Wait while comments are loading...