‘வாடகைக் காதலர்கள்’… ஒரு மணி நேரத்திற்கு ஒரு விலை… சீனாவில் புது கூத்து....
பீஜிங்: வாடகை டாக்ஸி கேள்விப்பட்டிருப்போம்... வாடகை வீட்டில் வசித்திருப்போம்... குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பெற்றுத்தரும் வாடகைத்தாய் பற்றி கூட படித்திருப்போம். ஆனால் சீனாவில் காதலர்கள் வாடகைக்கு கிடைக்கின்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த வாடகை காதலர்களை பெண்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று பெற்றோர்களிடம் அறிமுகம் செய்யலாம். ஏன் முத்தம் கூட கொடுக்கலாமாம். வாடகை நேரம் முடிந்த உடன் கழற்றி விட்டு விடலாமாம்.
சீனாவில் இந்த ஆண்டு பாம்புகளின் ஆண்டாக அரசு அறிவித்துள்ளது. கல்வி, வேலை விசயமாக வெளி இடங்களில் தங்கி உள்ள இளம்பெண்கள், பெற்றோர் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வார்கள். புத்தாண்டு கொண்டாட ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. வீட்டிற்கு வரும் பெண்களிடம் திருமணம் பற்றி பேசுவார்கள் பெற்றோர்கள்.

காதலர்கள் அறிமுகம்
எப்போது கல்யாணம் செய்து கொள்ள போகிறாய், யாரையாவது காதலிக்கிறாயா?, உன்னோட காதலன் யார்? போன்ற வழக்கமான கேள்விகளை கேட்கின்றனர். இதற்காக பல பெண்கள் தங்கள் காதலர்களை வீட்டுக்கு அழைத்து சென்று பெற்றோருக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றனர்.

வினோத விளம்பரம்
காதலன் இல்லாமல் தனித்து வாழும் இளம்பெண்கள் பலர், பெற்றோரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காகவே சீன ஆன்லைன் விற்பனை நிறுவனமான டவாபோ.காம்(taobao.com) வினோத விளம்பரம் வெளியிட்டுள்ளது. தனித்து வாழும் இளம்பெண்களுக்கு, வாடகைக்கு வாலிபர்கள் சேவை என்று விளம்பரம் தந்துள்ளது.

முத்தம் கொடுக்கலாம்
இதன்படி, தேவைப்படுவோருக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாலிபரை உடன் அனுப்பி வைப்பார்கள். அவர்களை வீட்டுக்கு அழைத்து சென்று பாய் பிரண்ட் என்று அறிமுகப்படுத்தலாம். வாலிபருடன் ஷாப்பிங் செல்லலாம். விரும்பினால் முத்தம் கொடுத்து கொள்ளலாம்.
இந்த அவசர பாய் பிரண்ட் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக, டிரஸ் மற்றும் தேவையான பொருட்களை இளம்பெண்கள் வாங்கி தரலாம். போக்குவரத்து, உணவு, தங்குமிடம் எல்லாம் பெண்களே ஏற்பாடு செய்து தர வேண்டும். இந்த சேவையில் ஈடுபட, பல இளம் வாலிபர்கள் இந்நிறுவனத்தில் பதிவு செய்துள்ளனர்.

18 கோடி இளம் பெண்ளுக்கு நோ பாய் ப்ரண்ட்
சீனாவில் மட்டும் 18 கோடி இளம்பெண்கள் திருமணம் ஆகாமல் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலர் பெற்றோரை திருப்திப்படுத்த இந்த வாடகை வாலிபர் சேவையை பயன்படுத்தி கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு விலை
ஒவ்வொன்றுக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் முழுவதும் சுற்றுவதற்கு 100 யுவான் அல்லது 15 அமெரிக்க டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெற்றோருடன் சந்திப்பு முடிந்த பின்பு, வாலிபரை கழற்றி விட்டு விடலாம். அதன்பின் அவரால் எந்த பிரச்னையும் ஏற்படாது. இதற்கு உத்தரவாதம் தருகிறது நிறுவனம்.
போற போக்கை பார்த்தால் இன்னும் எது எதை வாடகைக்கு விடுவாங்க தெரியலையே?.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications