For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் 55 சதவீத இந்தியர்களுக்கு சொந்த வீடு!: ஆய்வில் தகவல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

America
அமெரிக்காவில் 55 சதவிகித இந்தியர்கள் சொந்த வீட்டில் வசிக்கின்றனர் என்று சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையான "சென்சஸ் பீரோ" வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவில் நல்ல வருவாய் உள்ள இந்தியர்களை விடவும், ஐரோப்பியர்களே அதிக அளவில் சொந்த வீடு வைத்துள்ளனர்.

ஜெர்மானியர்கள் 72 சதவிகிதம் பேரும், பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 73 சதவிகிதம் பேரும் அமெரிக்காவில் சொந்த வீட்டில் வசிக்கின்றனர்.

இந்தியர்களில் 55 சதவிகிதம் பேர் சொந்த வீட்டில் வசிக்கின்றனர். எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டொமனிக்கன் ரிபப்ளிக் நாட்டைச் சேர்ந்த 25 சதவிகிதம் பேரும், ஹோண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த 31 சதவிகிதம் பேரும் சொந்த வீடு வைத்துள்ளனர்.

நியூயார்க், லாஸ்ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 10 மெட்ரோபாலிடன் நகரங்களில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் சொந்த வீட்டில் வகிப்பதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
According to the 'Homeownership Among the Foreign-Born Population: 2011', released by the Census Bureau, 55 per cent of the Indian-Americans own a house of their own while 45 live in rented accommodation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X