For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஷ்பு விவகாரம்: திமுக தலைமை முழு ஆதரவு!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: நடிகை குஷ்பு வீட்டின் மீதான தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தான் திமுக தலைவர் என்று கூறப்படுகிற நிலையில் இதை எதிர்க்கு வகையிலான ஒரு பேட்டியை ஆனந்த விகடனில் நடிகை குஷ்பு கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து சென்னையில் அவரது வீடு தாக்குதலுக்குள்ளானது. திருச்சியில் குஷ்பு மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

திமுக அறிக்கை

இந்நிலையில் திமுக தலைமை, நடிகை குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில்,

தி.மு.க. முன்னணியினரிடையே ஏதாவது கலகம் விளைவித்து குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று முயன்று பார்க்கின்ற ஒரு கூட்டத்தினர் அண்மைக்காலத்தில் குஷ்பு சுந்தரை தி.மு.க.விலிருந்து வெளியேற்ற சூழ்ச்சி வலைப் பின்னி, அதிலே வெற்றியடைய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஏமாற்றத்தால் குஷ்பு சுந்தரின் வீட்டைத் தாக்கவும், அவருடைய கார் கண்ணாடியை உடைக்கவுமான காட்டுமிராண்டிச் செயல்களில் ஈடுபட்டதோடு, குஷ்புவினுடைய பிள்ளைகளையும் மிரட்டி அச்சத்திற்குள்ளாக்கியிருக்கிறார்கள்.

இவ்வளவுக்குப் பிறகும் குஷ்பு கழகத்தை விட்டு வெளியேறவில்லையே என்ற ஆத்திரத்தில் தி.மு.கழகம் குஷ்புவை வெளியேற்றும் என்ற பொய்ச் செய்திகளையும் ஏடுகளில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் தலைமைக் கழகம் உடனடியாக தலையிட்டதோடு, கழகத்தின் கட்டுப்பாட்டினை காத்திடாமல் குஷ்புவின் கார், வீடு இவைகளுக்கு சேதாரம் ஏற்படுத்தி அவரையும் தாக்கிட முற்பட்ட காட்டுமிராண்டித்தனத்திற்கு காரணமானவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது கழகத்தின் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கனவே தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டவாறு இப்பிரச்சினைப் பற்றி அவரவர்களும் தம் இஷ்டம் போல் அறிக்கைகள் கொடுப்பதையும் - பேட்டிகள் அளிப்பதையும் அறவே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

குஷ்பு விளக்கம்

இதனிடையே நடிகை குஷ்புவும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், திமுகவில் ஜனநாயகம் இல்லை என்றும் குடும்ப ஆதிக்கம் பெருகி விட்டது என்றும் தொடர்ந்து திமுகவுக்கு எதிராக கருத்துக் களை பல்வேறு செய்தி ஊடகங்கள் பரப்பி வருகின்றன. இந்த சூழ்நிலை யில் ஒரு ஏடு சார்பில் நிருபர் கேட்ட கேள்விக்கு இந்த குற்றச்சாட்டை மறுத்து நான் அளித்த பதிலை அந்த ஏடு வெளியிட்ட முறையால் திமுக தொண்டர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என் வழி திமுக தலைவர் கருணாநிதி வழிதான் என்பதை எப்போதும் கூறி வருகிறேன். கருணாநிதி முன்மொழிவதை எப்போதும் நான் ஏற்றுக் கொண்டு பின்பற்றுவதை என் கடமையாக கொண்டுள்ளேன். என் வீட்டில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோ ரின் போட்டோ மட்டும் தான் உள்ளன. ஸ்டாலினை நான் பெரிதும் மதிப்பவள். அப்படியிருக்கும்போது நான் அளித்த பேட்டியை தொண்டர்கள் தவறாக புரிந்து கொண்டு என் மீது தாக்குதல் நடத்தியது வருத்தமாக உள்ளது என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

English summary
In a move that surprised many senior leaders, the DMK on Friday came out strongly in support of actress Kushboo in the recent controversy over her remarks on MK Stalin's elevation in the party. In a statement, the party said it will take action against those who attacked Kushboo and "threatened her children."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X