• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருப்பதி ஏழுமலையானுக்கு வேர்க்குமாமே? உங்களுக்குத் தெரியுமா?

By Mayura Akilan
|

தினசரி லட்சக்கணக்கானோர் தரிசனம்.... போராட்டம் நடந்தாலும் அதை பொருட்படுத்தாமல் இலங்கையில் இருந்து வந்து சுப்ரபாத தரிசனம் செய்துவிட்டு போகும் ராஜபக்சே என எல்லோராலும் விரும்பப்படும் சாமியாக இருக்கிறார் திருப்பதி வெங்கடாசலபதி.

ஏழுமலை மீது அமர்ந்திருந்தாலும் அசராமல் காணவரும் பக்தர்களுக்கு கணப்பொழுதும் சோர்வு இன்றி தரிசனம் தருகிறார் பாலாஜி. சாதாரண நாட்களில் சில மணிநேரங்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, விடுமுறை நாட்கள், சனிக்கிழமை என விசேச நாட்களில் பத்துமணிநேரத்திற்கும் மேல் காத்திருந்து ஏழுமலையான தரிசித்து செல்கின்றனர்.

ஏழுமலையானை காணவரும் பல கோடி பக்தர்களும் லட்சம் லட்சமாய் வேண்டிக்கொண்டு உண்டியலில் கொட்டுகின்றனர். தலைமுடி காணிக்கை மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போகிறதாக தெரிவிக்கிறது ஒருபுள்ளிவிபரம்.

இந்தியாவின் பணக்கார சுவாமியான திருப்பதி சுவாமியைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

பளபளக்கும் ஏழுமலையான்…

பளபளக்கும் ஏழுமலையான்…

எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சொரசொரரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் செதுக்கப்பட்ட அல்லது வார்க்கப்பட்ட அடையாளம் எதுவும் தெரியவில்லை. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.

ஏழுமலையானுக்கு வியர்க்கிறது

ஏழுமலையானுக்கு வியர்க்கிறது

ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் அங்கு நிலவும் வெப்பத்தால் ஏழுமலையானின் சிலையில் வியர்வை போல நீராவி படிகிறது. பீதாம்பரத்தால் இதை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிக்கின்றன. அந்த அளவுக்கு உள்ள வெப்பம் நிலவுகிறது.

புதிய மண்சட்டியில் தயிர் சாதம்…

புதிய மண்சட்டியில் தயிர் சாதம்…

ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

கோடிக்கணக்கில் வசூல்

கோடிக்கணக்கில் வசூல்

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாக இருக்கின்றன. ஏழுமலையானுக்கு அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்படுகின்றன.

அபிஷேகத்திற்கு ரூ. 1 லட்சம்

அபிஷேகத்திற்கு ரூ. 1 லட்சம்

அபிசேகப் பொருட்கள் அனைத்தும் தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும். அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

ஒரு ரோஜாவின் விலை ரூ.80

ஒரு ரோஜாவின் விலை ரூ.80

சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையானுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

பட்டுப் பீதாம்பரம்…

பட்டுப் பீதாம்பரம்…

ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

பல்லாயிரம் கோடி நகைகள்

பல்லாயிரம் கோடி நகைகள்

ஏழுமலையானின் நகைகளின் பல்லாயிரம் கோடிகளாகும், இவருடைய நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

அதிசய நீலம் ரூ. 100 கோடி

அதிசய நீலம் ரூ. 100 கோடி

ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு மட்டும் ரூ.100 கோடி.

நிராயுதபாணியான இறைவன்

நிராயுதபாணியான இறைவன்

எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

250 கோடி வருட அதிசய பாறைகள்

250 கோடி வருட அதிசய பாறைகள்

திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் சிலாதோரணம் என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம் என்கின்றனர்.

பச்சைக் கற்பூரம்

பச்சைக் கற்பூரம்

ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.

ஆண்டாள் மாலையும் கிளியும்…

ஆண்டாள் மாலையும் கிளியும்…

ஆண்டுதோறும் பிரம்மோற்சத்திற்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கும், மலையப்ப சுவாமிக்கும் சாத்தப்படுகிறது.

புனித புஸ்கரணியில் நீராடலாம்…

புனித புஸ்கரணியில் நீராடலாம்…

ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

ஆங்கிலேய பக்தர்கள்

ஆங்கிலேய பக்தர்கள்

1781ம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச் சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக் கடன் செலுத்தியிருக்கிறார். ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

வெங்கடேஸ்வரர் வீற்றிருக்கும் திருவேங்கடம்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
This truly amazing and the most unbelievable miracle occurred almost three and half decades ago in the holy abode of Lord Sri Venkateswara of the Tirumala Tirupati temple located on a hill top in the Southern part of India…This great miracle still surprises many and is still a mystery to many so called atheists of our modern times.. This miracle not only endorses the divine existence of God but it also very emphatically approves our faith in Him…
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more