For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்சல் குருவுக்கு தூக்கு- குடும்பத்தினருக்கு தாமத தகவல்- உள்துறை அமைச்சரிடம் பிரதமர் கேள்வி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளி அப்சல் குருவை தூக்கிலிட்டது தொடர்பாக அவரது குடும்பத்தினருக்கு தாமதமாக தகவல் தெரிவித்தது குறித்து உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயிடம் பிரதமர் மன்மோகன்சிங் கேள்வி கேட்டிருக்கிறார்.

அப்சல்குருவை திடீரென ரகசியமாக தூக்கிலிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவரது குடும்பத்தினருக்கும் முறைப்படி தகவல் தெரிவிக்காமல் 'ஸ்பீட்' போஸ்ட் மூலம் தகவல் தெரிவித்திருக்கின்றனர். இந்த ஸ்பீட் போஸ்ட் போய் சேருவதற்கு 2 நாட்களுக்கு முன்பே அப்சல் குரு தூக்கிலிடப்பட்டுவிட்டார். இதுவும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இக்குளறுபடியால் பிரதமர் மன்மோகன்சிங் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் ஏன் முன்கூட்டியே அப்சல்குருவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் உள்துறை அமைச்சர் ஷிண்டேயிடம் அவர் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

English summary
Prime Minister Manmohan Singh has questioned Home Minister Sushil Kumar Shinde about why the family of Afzal Guru, who was hanged on Saturday, was not informed in advance about the execution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X