மொகல் தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள்... பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு
டெல்லி: வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் ஜனாதிபதி மாளிகையில் உள்ள மொகல் கார்டனை பொதுமக்கள் பார்வைக்காக பிரணாப் முகர்ஜி இன்று திறந்து வைத்தார். இந்த தோட்டத்தில் மார்ச் 17ம் தேதி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
மொகல் தோட்டத்தில் மூலிகைளும், கண்ணைக் கவரும் வண்ண மலர்களும் பூத்துக்குலுங்குகின்றன. இந்த தோட்டத்தில் காலை நேரத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நடைபயிற்சி மேற்கொள்வார். இந்த தோட்டம் ஆண்டு தோறும் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 17-ம் தேதி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

மனம் மயக்கும் மலர்கள்
ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தோட்டத்தில் ரோஸ், தலியா, காலண்டுலா, ஜெர்டிநரா, லினாரியா, லார்க்ஸ்புர், கஸ்னியா, வெர்பெனா, வியோலா, பான்சி கார்னேசன், கிரிசாந்தேமம், மேரிகோல்டு, சால்வியா போன்ற மலர்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும். மொகல் கார்டனில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். உணவுப் பொருட்களோ, தண்ணீரோ எதுவும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

பிரணாப் முகர்ஜி அழைப்பு
இந்த தோட்டத்தில் தினமும் காலையில் மிகவும் மகிழ்ச்சியுடன் வாக்கிங் செல்வேன். இந்த மலர்களை பார்வையிட மக்களை வரவேற்கிறேன். பூத்துக்குலுங்கும் மலர்களை போன்று எதிர்காலத்தில் நமது நாடும் பிரகாசிக்கும் என பிரணாப் கூறியுள்ளதாக ராஷ்டிரபதி பவன் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் 6.5 லட்சம் மக்கள் இந்த கார்டனை பார்த்து ரசித்தனர் இந்த ஆண்டு அதிக அளவில் பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications