For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹூசைனி வடித்த ஜெ. ரத்த சிலை: ரத்த தான வங்கி அமைப்பினர் கொதிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Hussaini
சென்னை: ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு பால்குடம், தீச்சட்டி என அதிமுகவினர் கொண்டாடினாலும் ரத்த சிலை வடித்து தனது விசுவாசத்தை காட்டியுள்ளார் கராத்தே வீரர் ஹூசைனி.

இந்த சிலை வடிக்க 11 லிட்டர் ரத்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக தன் உடலில் உள்ள ரத்தத்தை எடுத்து உறைய வைத்துள்ளார் ஹூசைனி. தவிர வில்வித்தை பயிலும் 32 மாணவர்களிடம் இருந்தும் ரத்தத்தை சேகரித்துள்ளார்.

இப்பொழுது ஜெயலலிதாவின் 65 வது பிறந்தநாளுக்காக ரத்த சிலையை உருவாக்கி ஃப்ரீசரில் வைத்துள்ளார். இதை வெளியே எடுத்த உடன் உருகத் தொடங்குகிறது. இந்த ரத்த சிலைதான் இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உயிர்காக்க பயன்படுத்தும் ரத்தத்தினை இப்படி சிலை வடித்து வீணடித்துவிட்டார் என்றும், வில்வித்தை கற்றுக்கொள்ள வந்தவர்களிடம் ரத்தம் எடுத்து அனுமதியின்றி பதுக்கி வைத்துவிட்டார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரத்ததான வங்கி அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனராம்.

சில வருடங்களுக்கு முன்பு ரத்த ஓவியங்களை வரைந்து ஹூசைனி காட்டியிருக்கிறார். அப்போது அவர் நடத்தும் வில் வித்தை பள்ளிக்கு 50 லட்சம் ரூபாய் நிதி கொடுத்த ஜெயலலிதா, இனி இவ்வாறு செய்யக்கூடாது என்று கடிந்து கொண்டாராம். ஆனாலும் ரத்த ஓவியத்தோடு நிறுத்தாமல் ரத்த சிலை வடித்துவிட்டார் ஹூசைனி.

English summary
Various blood donors has demanded action against Hussini for making statue of CM Jayalalitha in human blood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X