For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு- சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட 'ஒன்று கூடல்'

By Mathi
Google Oneindia Tamil News

May 17 organized rally at Marina
சென்னை: தமிழீழத் தனியரசு அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட ஒன்று கூடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மே பதினேழு இயக்கத்தினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் கூடினர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, உலக தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன், பீகார் எம்.எல்.ஏ. சோம்பிரகாஷ் சிங் உட்பட பலர் பங்கேற்றனர்

இதில் பேசிய வைகோ, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வருவது மோசடி தீர்மானம். இலங்கையில் தமிழ் ஈழம் அமைப்பதே ஒரே தீர்வாகும். மாணவர்களின் எழுச்சிமிக்க இந்த போராட்டத்தினால் ஈழ விடுதலைப் போர் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. தமிழக மாணவர்கள் அரசியல் பின்னணி எதுவும் இல்லாமல் சரியான இலக்கை நோக்கி போராட்டத்தை வழி நடத்தி செல்கின்றனர். மாணவர்களின் இந்த எழுச்சிமிக்க போராட்டத்துக்கு நானும், பழ.நெடுமாறனும் ஒரு பாதுகாவலர்களாக, காவலாளியாக என்றும் இருப்போம் என்றார் அவர்.

English summary
May 17 Movement has now joined the fray by organizing a rally Marina Beach here to share their commonality of their pro-Eelam objective with the enraged student community in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X