For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கு: திண்டுக்கல் லியோனிக்கு நோட்டீஸ்

By Chakra
Google Oneindia Tamil News

Dindigul Leoni
திருப்பூர்: முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக திமுக பேச்சாளர்கள் திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட இரண்டு பேரும் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி, திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்த திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் நடந்த பட்டிமன்றத்தில், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகவும், அவரது பொது வாழ்க்கைக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், பேச்சாளர்கள் பேசினர்.

இதில் பங்கேற்று பேசிய திமுக பேச்சாளர்கள் திண்டுக்கல் லியோனி, கோவை தனபால் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கணேசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர், திண்டுக்கல் லியோனி மற்றும் கோவை தனபால் ஆகியோர் வரும் 22ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி, புகார் மீது உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

English summary
DMK speakers Dindigul Leoni and Coimbatore Dhanapal has been issued a notice by Tiruppur court for defaming CM Jayalalithaa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X