For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக தலைவராக ஸ்டாலினுக்கு 60% ஆதரவு!; குஷ்புவுக்கு 8%; அதிமுக தலைவராக சசிகலாவுக்கு 4.41% ஆதரவு!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஜூனியர் விகடன் இதழ் 'மக்கள் மனசு' என்ற பெயரில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி வெளியிட்டு வருகிறது.

ஜூனியர் விகடனின் முதல் கட்ட சர்வே முடிவுகளைத் தொடர்ந்து 2-ம் கட்ட சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. நேரடியாக 2,701 நபர்களிடமும் இணையம் வழியாக 5,055 பேரிடமும் 23 கேள்விகள் அடங்கிய கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறது ஜு.வி.

முதலிடம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, சசிகலாவுக்கு 4% தான்:

முதலிடம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, சசிகலாவுக்கு 4% தான்:

இதில் முதல்வர் ஜெயலலிதாவைத் தவிர அதிமுகவுக்கு தலைமை ஏற்கும் தகுதி வேறு யாருக்கு இருக்கிறது என்ற கேள்விக்கு சசிகலாவுக்கு 4.41% அதாவது 342 பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். ஆனால் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு 22.86% அதாவது 1,773 பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். மற்றவர்களுக்குத்தான் 72.73% அதாவது 5,641 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலினுக்கு 'அறுதிப் பெரும்பான்மை' ஆதரவு...

ஸ்டாலினுக்கு 'அறுதிப் பெரும்பான்மை' ஆதரவு...

இதேபோல் திமுகவில் அடுத்த தலைவராக யார் வர வேண்டும் என்பதில் ஸ்டாலின் 60.44% அதாவது 4,688 பேரின் ஆதரவைப் பெற்று 'அறுதிப் பெரும்பான்மை' பெற்றிருக்கிறார்.

அழகிரியை முந்திய குஷ்பு:

அழகிரியை முந்திய குஷ்பு:

ஜூவியின் சர்வே திமுகவில் இன்னொரு களேபரத்துக்கும் வழிவகுத்திருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் மற்றொரு மகனான மு.க. அழகிரிக்கு நடிகை குஷ்புவை விட குறைவான செல்வாக்கே மக்களிடம் இருப்பதாக ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

குஷ்புவுக்கு 8.44%, அழகிரிக்கு 2.52%..

குஷ்புவுக்கு 8.44%, அழகிரிக்கு 2.52%..

குஷ்புவுக்கு 8.44% அதாவது 655 பேர் ஆதரவும் மு.க. அழகிரிக்கு 2.52% அதாவது 195 பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர் ஜூவி சர்வேயில்!

English summary
As per junior Vikatan survey in TN on next DMK leaer MK Stalin-60.44% and netx ADMK leader Sasikala got only 4.41%.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X