உலகிலேயே அதிக ஊழியர்களை கொண்ட ஐடி நிறுவனங்கள் ஐபிஎம், அக்சென்சர், டிசிஎஸ்...
சென்னை: உலகிலேயே 2வது மிக அதிகமான ஊழியர்களைக் கொண்ட சாப்ட்வேர் நிறுவனம் என்ற இடத்தை டாடா கன்சன்டல்சி நிறுவனம் (TCS) பிடித்துள்ளது. உலகிலேயே இந்த விஷயத்தில் முதலிடத்தில் இருப்பது ஐபிஎம் தான்.

வருவாயில் பாதி...
2,64,000 ஊழியர்களைக் கொண்டுள்ள டிசிஎஸ், அக்சென்சர் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது. ஆனால், வருவாயை வைத்து ஒப்பிடுகையில் அக்சென்சர் நிறுவனத்தின் மொத்த வருவாயில் பாதியைத் தான் டிசிஎஸ் ஈட்டி வருகிறது.

ஐபிஎம்மில் 4 லட்சம் பேர்...
சுமார் 4,00,000 ஊழியர்களைக் கொண்டுள்ள ஐபிஎம் தான் (இதில் 1 லட்சம் பேர் ஹார்ட்வேர் பிரிவில் உள்ளனர்) உலகிலேயே மிக அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ள சாப்ட்வேர் நிறுவனமாகத் திகழ்கிறது. அக்சென்சர் நிறுவனத்தில் மொத்தம் 2,61,000 ஊழியர்கள் உள்ளனர்.

ஒரு ஊழியர் ஈட்டித் தருவது ரூ. 23 லட்சம்..
ஆனால், 'டப்பு' விஷயத்தை வைத்துப் பார்த்தால் ஐபிஎம், அக்சென்சர் ஆகியவை டிசிஎஸ்ஸை விட எங்கேயோ போய்விட்டன. டிசிஎஸ்ஸைப் பொறுத்தவரை revenue per employee, அதாவது ஆண்டுக்கு ஒரு ஊழியர் மூலம் ஈட்டப்படும் சராசரி வருவாய் $46,000 (ரூ. 23 லட்சம் ஆகும்).

ஐபிஎம்மில் ரூ. 98.50 லட்சம், அக்சென்சரில் ரூ. 53.50 லட்சம்...
இதுவே ஐபிஎம் ஈட்டும் தொகை எவ்வளவு தெரியுமா பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ், ரூ. 98.50 லட்சம்யா.. ($197,000). அக்சென்சரும் சும்மா இல்லைன்னே.. அங்கு சராசரியாக ஒரு ஊழியர் ஈட்டித் தரும் பணம் ரூ. 53.50 லட்சம் ($107,000). ஐபிஎம் மட்டும் எப்படி இவ்வளவு ஈட்டுகிறது என்றால், அவர்கள் பெரிய டீல்களில் சாப்ட்வேரோடு தங்களது ஹார்ட்வேரையும் சேர்த்து விற்பது தான்.

ஆண்டு வருமானம் 1,40 லட்சம் கோடி, 2.95 லட்சம் கோடி...
சர்வதேச அளவில் அக்சென்சர் ஆண்டொன்றுக்கு ஈட்டும் வருமானம் 28 பில்லியன் டாலர், சுமார் 1,40 லட்சம் கோடி. இது டிசிஎஸ்சின் வருவாயைவிட 2 மடங்கு அதிகமாகும். ஐபிஎம்மின் ஆண்டு வருமானம் 59 பில்லியன் டாலர். அதாகப்பட்டது, 2.95 லட்சம் கோடி.

இன்போசிஸ், காக்னிசன்ட், கேப்ஜெமினி...
கடந்த டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் டிசிஎஸ்சின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 263,637. இன்போசிஸ், காக்னிசன்ட் நிறுவனங்களில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்களும், விப்ரோவில் 1.42 லட்சம் பேரும், கேப்ஜெமினியில் 1.25 லட்சம் பேரும் பணியாற்றி வருகின்றனர்.

விப்ரோவில்...
கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் மட்டும் டிசிஎஸ்சில் சேர்ந்த ஊழியர்கள் எண்ணிக்கை 17,000 பேர். இது இன்போசிஸ், காக்னிசன்ட், விப்ரோவில் சேர்க்கப்பட்ட ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிகம்.
டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 50 முதல் 55% ஊழியர்களின் ஊதியத்துக்கு செலவிடப்படுகிறது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications