For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல் விலை 50 காசு குறைகிறது, டீசல் விலை 50 காசு அதிகரிக்கிறது!

By Chakra
Google Oneindia Tamil News

Petrol prices likely to be slashed by upto 50 paise per litre, diesel price to go up
டெல்லி: பெட்ரோல், டீசல் விலைகள், இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் சர்வதேச சந்தையில் கடந்த சில வாரங்களாக கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.

அதே நேரத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சீராகவே உள்ளது.

இந்த இரு காரணங்களால் கடந்த 1ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 85 காசு குறைக்கப்பட்டது. இந் நிலையில் பெட்ரோல் விலையை மேலும் குறைப்பதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது.

இதனால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு மேலும் 50 பைசா முதல் ரூ.1.50 வரை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

அதே நேரத்தில் டீசல் விலை மேலும் 50 காசு உயரலாம் என்று தெரிகிறது. டீசலுக்கு மத்திய அரசு பெருமளவு மானியம் வழங்கி வருகிறது. அதை மத்திய அரசு நிறுத்தி விட்டதால் ஒரு லிட்டர் டீசல் விலை உடனடியாக ரூ. 11 வரை உயரும்.

இந்த இழப்பை ஈடுகட்ட ஒவ்வொரு மாதமும் டீசல் விலை லிட்டருக்கு 50 காசு வீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு, அதை கடந்த மாதம் 23ம் தேதி முதல் அமலாக்கவும் ஆரம்பித்துவிட்டது.

இதன் தொடர்ச்சியாக டீசல் விலை விரைவிலேயே மேலும் 50 காசு அதிகரிக்கும் என்று தெரிகிறது.

பெட்ரோல் விலை குறைப்பும், டீசல் விலை உயர்வும் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரலாம் என்கிறார்கள்.

English summary
Oil marketing companies (OMCs) are likely to slash the prices of petrol by upto 50 paise per litre soon, and diesel price may go up by 50 paise per litre, as per media reports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X