கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட்
Weekly Rasi Palan: ஜூன் 8 முதல் 14 ஆம் தேதி (வைகாசி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் விருச்சிக வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். ஜூன் 2 ஆம் தேதி எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது.
அந்த வகையில், ஜூன் 8 முதல் 14 ஆம் தேதி (வைகாசி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம் சம்பந்தப்பட்ட ஏற்றங்கள் ஏற்படும். அலர்ஜி தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குடும்பத்திலும், உறவுகள் தொடர்பான விஷயங்களிலும் அக்கறை செலுத்துவது நல்லது. நெருங்கி உறவுகளுக்கும், உங்களுக்கு சிலரின் தூண்டுதலால் பிரிவு ஏற்படும்.
அனுகூலம்
இந்த வாரம் அருமையான வாரமாக இருக்கும். ஆற்றம் மிகுந்த அற்புதமாக வேலை செய்யும். பெரிய ஆட்களின் தொடர்புகள் ஏற்படும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். இளைய சகோதரன், சகோதரிகளுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். கழுத்து வலி சரியாகும். முயற்சிகளில் ஜெயம் உண்டாகும். தெய்வ அனுக்கிரகத்தால் எல்லா விஷயங்களும் எளிமையாக நடக்கும்.
ஆரோக்கியம்
வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். துணைக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கண் உபாதைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. அஷ்டமத்தில் புதன் இருப்பதால் காசு, பணம் தொடர்பான சிறு சிறு தட்டுப்பாடுகள் ஏற்படும் வாய்ப்பிருந்தாலும் பணவரவு இருந்து கொண்டே இருக்கும். நல்ல மாற்றங்களை கண்டிப்பாக பார்ப்பீர்கள். முழு சந்தோஷத்தை அனுபவிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
சுபச்செலவுகள்
திடீர் பயணங்கள் ஏற்படும். அடுத்தடுத்து சுபச்செலவுகள் ஏற்படும். திடீர் பயணங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மற்றவர்களுக்கு உதவும் சூழல் ஏற்படும். ஆரோக்கியத்தில், ரத்தத்தில் பரவும் நோய் தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். பெருமாள் வழிபாடு பெரிய நன்மைகளை ஏற்படுத்தும். சந்தோஷம் 70 சதவீதம், பொருளாதார ஏற்றம் 90 சதவீதம் நன்றாக இருக்கும். உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
விருச்சிக ராசிக்கு யோகத்தை தரும் உச்சகுரு.. இந்த ஜூனில் வரப்போகும் பெரிய முன்னேற்றம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும்











Click it and Unblock the Notifications