For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழு ஆய்வு- ஏப். 29ல் தீர்ப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்துள்ள நிபுணர் குழுவினர் 4 பேர் ஸ்டெர்லைட் ஆலையில் இன்று ஆய்வினை தொடங்கியுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த மார்ச் 23ம் தேதி கந்தக டை ஆக்சைடு என்ற நச்சு வாயு வெளியேறியதை அடுத்து ஆலையை மூடும்படி மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

Expert committee begins inspection in Sterlite plant

ஆனால் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் சார்பில் மனு செய்யப்பட்டது. அதனைத் விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைத்தது. இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிபுணர் குழு தற்போது ஆய்வினை தொடங்கியுள்ளது.

இந்த அறிக்கையை வரும் 29ம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நிபுணர் குழு சமர்ப்பிக்கும். இந்த அறிக்கையில் அடிப்படையில் அன்றைய தினமே தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பினை வழங்கும் என்று கூறப்படுகிறது.

English summary
National green Tribunal appointed expert committee has began inspection in the Sterlite plant in Tuticorin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X