For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விண்வெளி குப்பைகளால் விண்கலங்களுக்கு ஆபத்து: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: விண்வெளியில் சுற்றிவரும் குப்பைகளால் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

விண்வெளி ஆராய்ச்சி, தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு என பல காரணங்களுக்காக எண்ணெற்ற செயற்கைக் கோள்களை நாம் பூமியிலிருந்து ஏவி வருகிறோம். இதற்காக ராக்கெட்டுகளை பயன்படுத்துகிறோம்.

இவ்வாறு விண்வெளிக்கு நாம் அனுப்பிய ராக்கெட்டுகள், செயற்கைக் கோள்கள், விண்கலங்கள் ஏராளமாக அங்கு சுற்றிக் கொண்டிருக்கின்றன.

அதில் காலாவதியான விண்கலங்கள், செயற்கைக் கோள்கள், அதை ஏற்றிச்சென்ற ராக்கெட்டுகள் மற்றும் வெடித்த சிதறி பாகங்களும் அண்ட வெளியில் சுற்றி வருகின்றன.

குப்பை ஜாஸ்தி...

குப்பை ஜாஸ்தி...

இந்த குப்பைகள் சேர்த்து மொத்தம் 19,000க்கும் மேற்பட்ட விண்வெளிக் குப்பைகளும் விண்வெளியில் சுற்றி வருவதாக சொல்லப்படுகிறது.

200 ஆண்டுகளில் பேரழிவு...

200 ஆண்டுகளில் பேரழிவு...

அவ்வாறு சுற்றிவரும் குப்பைகளை நாம் உடனடியாக தடுக்கா விட்டால் அது செயற்கைக் கோள்களின் சுற்று வட்டப்பாதையில் அடுத்த 200 ஆண்டுகளில் பேரழிவு மோதல்களை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.

பக்கத்துல ஆபத்து....

பக்கத்துல ஆபத்து....

பூமியை சுற்றிவரும் செயற்கைக் கோள்கள் இதுபோன்று பேரழிவுகளை இன்னும் 5-9 வருடங்களுக்குள் சந்திக்கும் வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

English summary
The European Space Agency warns that space debris must be removed to prevent potentially catastrophic collisions with operational spacecrafts and satellites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X