For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் வீடு கட்டும் பணியில் நல்ல முன்னேற்றம்: இந்திய தூதரகம்

By Siva
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த அரசு உதவியுடன் நடந்து வரும் வீடு கட்டும் பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 40,000 வீடுகளை கட்ட இந்திய அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வீடு கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த வீடு கட்டும் திட்டத்தை கண்காணிப்பு குழு பார்வையிட்டு அறிக்கை அளித்துள்ளது. அதில் இரண்டாவது கட்ட வீடு கட்டும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, பயனாளிகள் தேர்வு ஆகியவை முதலாவது ஆண்டில் திட்டமிட்டபடி நடந்து வருகிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளது.

மார்ச் மாத இறுதி வரை 228 கோடி இலங்கை ரூபாய் தவணை தொகையாக வழங்கப்பட்டுள்ளது. முதல் தவணைத் தொகை 11,379 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2-வது தவணைத் தொகை 3,448 பயனாளிகளுக்கும், 3-வது தவணைத் தொகை 741 பயனாளிகளுக்கும், 4-வது தவணைத் தொகை 18 பயனாளிகளுக்கும் வழங்கப்படும்.

கிழக்கு மாகாணத்தில் இந்த வீடு கட்டும் திட்டம் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் உள்ள மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கும் 4 நிறுவனங்களில் ஐ.நா.வும் ஒன்று. 36 மாத திட்டமான இந்த ஐ.நா. குடியிருப்பு திட்டம் 2012 மத்தியில் தொடங்கியது. 2015 மத்தியில் முடிகிறது. மக்களுக்கு நேரடியாக வீடு வழங்கும் இந்த திட்டத்தின் கீழ் 43,000 வீடுகள் புதிதாக கட்டுதல் மற்றும் சீரமைத்தல் மூலம் வழங்கப்படுகிறது என்று அது அதில் தெரிவித்துள்ளது.

English summary
Indian embassy in Sri Lanka told that house construction work is going on in a full swing in the war torn north-eastern corner of the island nation. Indian government is financially helping to construct houses for the tamils there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X