கருச்சிதைவிலிருந்து காக்க 15 வயது பெண்களுக்கும் கருத்தடை மாத்திரை
நியூயார்க்: முறையற்ற கருசிதைவுகள் மூலம் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களைக் குறைக்கும் வகையில் டாக்டரின் மருந்துசீட்டு இல்லாமல் 15 வயது பெண்களுக்கும் கருத்தடை மாத்திரையை விற்க அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
தேவையற்ற கருவை தவிர்க்க பெண்கள் பல்வேறு கருத்தடை முறைகளை கடைபிடிக்கின்றனர். அவற்றில், தனது துணைவருடன் உடலுறவில் ஈடுபட்ட 72 மணி நேரத்திற்குள் கருத்தடை மாத்திரை உட்கொள்ளும் முறையும் ஒன்று. பெரும்பாலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் பெண்களின் விருப்பத் தேர்வு இவ்வகை மாத்திரைகள் தான்.
உடலுறவை எதிர்பார்த்து, சற்று நேரத்திற்கு முன்னர் சாப்பிடும் மாத்திரைக்கு நிகரான பலனை இந்தவகை மாத்திரைகளும் அளிப்பதால், எதிர்பாராத விதமாக உடலுறவு கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகும் பெண்கள், கவலையில்லாமல் மருந்துக் கடைகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி உபயோகிக்க தொடங்கினர். மிக குறைந்த வயதில் பெண்கள் ஆண் துணையை தேடிக்கொள்கிறார்கள் என கருதிய அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கவுன்சில் 2011ல் இவ்வகை மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு விற்க தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது , இந்த தடையை நீக்கி 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் இனி 'பிளான்-பி-ஒன் ஸ்டெப்' எனப்படும் கருத்தடை மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரை இன்றி வாங்கிக் கொள்ளலாம் என அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கவுன்சில் நேற்று அறிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் 2011ல் கொண்டு வரப்பட்ட தடை மசோதாவில் '17 வயது' என்பதை மாற்றி, 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு என மாற்றப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications