For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரள லாட்டரியில் தொழிலாளிக்கு ரூ.2 கோடி, 101 பவுன் தங்கம் பரிசு: ஆனால், சீட்டைக் காணவில்லை!!!

By Siva
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள அரசு லாட்டரியில் மரம் வெட்டும் தொழிலாளிக்கு ரூ.2 கோடி மற்றும் 101 பவுன் தங்கம் பரிசு விழுந்துள்ளது. ஆனால் அவர் அந்த லாட்டரி சீட்டை தொலைத்துவிட்டதால் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

கேரள மாநிலம் திருவல்லாவைச் சேர்ந்தவர் மணி(40). மரம் வெட்டும் தொழிலாளி. அவர் கேரள அரசு லாட்டரியின் சித்திரை விஷு பம்பர் குலுக்கல் சீட்டை வாங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி குலுக்கல் நடந்தது. அதில் முதல் பரிசான ரூ.2 கோடி மற்றும் 101 பவுன் தங்கம் மணிக்கு விழுந்தது.

Kerala lottery
இது குறித்து ஏஜென்சியின் உரிமையாளர் அஜீத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் மணியைப் பார்த்து விஷயத்தை கூற திருவல்லா சென்றார். ஆனால் மணி வீட்டில் இல்லை, குடும்பத்துடன் பழனிக்கு சென்றிருந்தார். இதையடுத்து அஜீத் பக்கத்துவீட்டுக்காரர்களிடம் இருந்து மணியின் செல்போன் நம்பரை வாங்கி அவரை அழைத்து விவரத்தை தெரிவித்தார்.

உடனே மணி ஊருக்கு திரும்பி வந்து பீரோவில் லாட்டரி சீட்டை தேடினார். ஆனால் அவர் துரதிர்ஷ்டம் பரிசு விழுந்த லாட்டரி சீட்டைக் காணவில்லை. இதனால் அவர் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

English summary
Mani, a Tiruvalla based woodcutter got Rs. 2 crore and 101 sovereign gold in the Kerala government lottery. Unfortunately he misplaced the lottery ticket.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X