உப்பளங்களை கையகப்படுத்த எதிர்ப்பு: உப்பு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்
தூத்துக்குடி: அனல் மின்நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு வருவதற்காக கப்பல் கட்டும் தளம் அமைக்க உப்பளங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து தூத்துக்குடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் உப்பு உற்பத்தியாளர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் உப்பு உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.இதில் 90 சதவீதம் அளவுக்கு தூத்துக்குடி பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
தூத்துக்குடியில் சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தியாகிறது. இதில் தன்பாடு பகுதியில் சுமார் 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 12 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
உப்பு வாருதல்,சுமைகள்,மூடை பிடித்தல், உப்பு அரவை, பண்டல் போடுதல், என இத்தொழிலை நம்பி சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
தற்போது தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு வருவதற்காக புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து பூர்வாங்க பணிகள் நடந்துவருகிறது. இதற்காக முள்ளக்காடு, முத்தையாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தன்பாடு உப்பளங்களை கையகப்படுத்த அரசு உத்தேசித்துள்ளாக தெரிகிறது. இதனால் 1 லடசம் மக்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.
எனவே இதுகுறித்து தன்பாடு, கோவளம், சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் முதல்வருக்கு மனு அளித்துள்ளனர்.
மேலும் இன்று 27ம் தேதி கோவளம், பசுவந்தரை, தன்பாடு சிறிய அளவு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இதனால் முத்தையாபுரம், முள்ளக்காடு, கோவளம், தங்கம்மாள்புரம், சவேரியர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பளங்கள் மற்றும் அதை சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications