பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ளக் கூடாது: நரேந்திர மோடி ஆவேசம்
அகமதாபாத்: சத்தீஸ்கரில் காங்கிரஸ் பேரணியில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர்கள் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிவம் பஸ்தார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காங்கிரஸ் சார்பில் பரிவர்தன் பேரணி நடந்தது. சாதாரண மக்களைப் போன்று உடையணிந்த சுமார் 250 நக்சலைட்டுகள் இந்த பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நந்த் குமார் பட்டேல் மற்றும் அவரது மகனை கடத்திச் சென்றனர்.
கடத்திச் செல்லப்பட்ட இருவரின் உடல்களும் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மூத்த காங்கிரஸ் தலைவர் மகேந்திர கர்மா உள்பட 25 பேர் பலியாகினர்.
இந்த தாக்குதலுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை நாம் ஒருபோதும் சகித்துக் கொள்ளக் கூடாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இது நம் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமாக வேண்டிக் கொள்கிறேன். நம் ஜனநாயகத்தை அச்சுறுத்தும் நக்சலைட்டுகளை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications