அப்பாடி... நாளையோடு முடியுது கத்திரி!

Subscribe to Oneindia Tamil

Agni Nakshathiram ends Tomorrow
சென்னை: தமிழகத்தில் நிலவி வந்த கத்திரி வெயில் செவ்வாய்க் கிழமையுடன் (மே 28) முடிவடைகிறது.

கடந்த மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது.

ஆரம்பத்தில் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது வெயிலின் தாக்கம். ஆனால் சமீப நாட்களில் 110 டிகிரி வரை அதிகரித்து மக்களை வறுத்தெடுத்தது.

வேலூர், திருச்சி, மதுரை, கரூர், பாளையங்கோட்டை, சென்னை உள்ளிட்ட இடங்களில் பல நாள்கள் 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. வட மாவட்டங்கள் முழுவதும் கிட்டத்தட்ட பாலைவனமாக வறண்டு காட்சியளிக்கின்றன.

ஆனால் நேற்று கள்ளக்குறிச்சி, திண்டிவனம் பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்தது.

இந்த நிலையில் கடந்த 3 வாரங்களாக வாட்டி வதைத்த கத்தரி வெயில் செவ்வாய்க்கிழமையுடன் (மே 28) முடிவடைகிறது.

அதன் பிறகாவது வெயில் குறையுமா? என்றால், 'இல்லை, இந்த அனல் காற்றும் வெயிலும் மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும்' என்கிறார், 'வரும் ஆனா வராது' புகழ் ரமணன்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+