ஜி.கே.வாசனின் திடீர் விசிட்... டென்ஷனைக் குறைக்க 'ஹாட் வாட்டர்' குடித்த இளங்கோவன்!

அரவாக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சதாசிவசம் சிலை திறப்பு விழா நடந்தது. இதில் கோஷ்டித் தலைவர்களான வாசனும், இளங்கோவனும் காரில் சென்றனர். உடன் ஏராளமான தொண்டர்களும் சென்றனர்.
கார் மாயனூர் சங்கு நகர் சென்றபோது திடீரென இந்த ஊரைச் சேர்ந்த சேவாதள மகிளா அமைப்பின் அமைப்பாளரான பார்வதியின் வீட்டுக்கு வண்டியை விடுப்பா என்று டிரைவரிடம் உத்தரவிட்டார். இதைக் கேட்டு பாதுகாப்புக்கு வந்த போலீஸார் குழம்பினர். மேலும் ஈவிகேஎஸ் இளங்கோவனும் குழம்பினார். ஏன் இந்த ஊருக்கு என்பதே அவர்களின் குழப்பம்.
இருப்பினும் யாரும் எதுவும் பேசவில்லை. கார், பார்வதி வீட்டுக்குப் போய் நின்றது. பார்வதி மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மகன் பாபுவுக்குத் திருமணம் நடைபெறவுள்ளது. பாபு மாற்றுத் திறனாளி ஆவார். தனது வீட்டுக்கு திடீரென ஜி.கே.வாசன் வந்து நின்றதும் பார்வதிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. பாபுவும் மகிழ்ந்து போனார். உடனே ஆரத்தி எடுத்து வாசனை பார்வதி வரவேற்றார்.
வாசன், அவர்களுடன் உற்சாகமாகப் பேசினார். பார்வதி குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் வாசனிடம் மிகவும் பாசமாகப் பேசினர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் இளங்கோவன். பின்னர் என்ன நினைத்தாரோ, பார்வதி குடும்பத்தாரிடம் சூடா தண்ணி கொடுங்க என்று கேட்டு வாங்கி மடக் மடக்கென்று குடித்தார்.
பின்னர் பாபுவை வாழ்த்தி அவரது கையில் மொய்ப் பணமாக ரூ. 5000 கொடுத்து வாழ்த்தினார் வாசன். பின்னர் புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் விடை பெற்றார்.
தேர்தல் வருதுல்ல.. அதனால இப்படித்தான் இனி அடிக்கடி நடக்கும்..!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications