கலிபோர்னியாவில் ஸ்ரீ ருக்மணி பாண்டுரங்கா, ஷீரடி சாய் பாபா கோவில் மகா கும்பாபிஷேகம்
கலிபோர்னியா: அமெரிக்காவின் சான் ஜோஸில் உள்ள பாலாஜி கோவில் சார்பில் ஸ்ரீ ருக்மணி பாண்டுரங்கா மற்றும் ஸ்ரீ ஷீரடி சாய் பாபா ஆலயத்தின் கும்பாபிஷேகம் வரும் 29ம் தேதி முதல் ஜூன் மாதம் 2ம் தேதி வரை நடைபெறுகிறது.
பாலாஜி கோவிலின் நிறுவனரும், தலைவருமான சுவாமி ஆனந்தநாதாஜி மற்றும் கலிபோர்னியாவில் பிரபலமாக உள்ள புரோகிதர்கள் வேத, ஆகம விதிகளின்படி கும்பாபிஷேகத்தை நடத்தவிருக்கின்றனர். ஸ்ரீ கணபதி பூஜை, புன்ய வாச்சனம், சுத்தி மற்றும் மஹா ஹோமம் உள்ளிட்டவை நடத்தப்படும்.
மகா கும்பாபிஷேகம் நடக்கும் 5 நாட்களும் சாமி சிலைகளுக்கு தானியங்கள், நீர், பால், பூ ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படும். ஜூன் 2ம் தேதி சுவாமிஜி கலாபிஷேகம் செய்யவிருக்கிறார். அமெரிக்காவில் சுவாமிஜி 20 ஆண்டுகள் சேவை செய்ததன் நினைவு கொண்டாட்டம் ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகள் நடைபெறும்.
ஜூன் 1ம் தேதி விஜய் சவ்வா மற்றும் உமா ஆகியோர் தலைமையிலான தெலுங்கான கலாச்சார அமைப்பு மற்றும் அதன் குழு உள்ளூர் இந்திய அமைப்புகளுடன் சேர்ந்து ஹோமம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறது. ஜூன் 2ம் தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெறும்.
அன்று மதியம் 2 மணிக்கு ஸ்ரீனிவாசா கல்யாணம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 108 சத்ய நாராயண பூஜையும் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது குறித்து மேலும் விவரம் அறிய www.BalajiTemple.net என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications