ரொம்ப கஷ்டமாம்.. லண்டன் பங்களாவை விற்க லட்சுமி மிட்டல் முடிவு!
லண்டன்: பொருளாதார நெருக்கடி ஸ்டீல் தொழில் துறையில் கோலோச்சும் உலகின் பணக்கார இந்தியரான லட்சுமி மிட்டலையும் விட்டு வைக்கவில்லை..அவர் தமது லண்டன் ஆடம்பர மாளிகையை விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறாராம்..
"உலக" உருக்கு மன்னன் என்று பெயரெடுத்தவர் லட்சுமி மிட்டல்...அவர் தமது மகன் ஆதித்யாவுக்காக லண்டனில் ஆடம்பர மாளிகை ஒன்றை 2008ஆம் ஆண்டு வாங்கியிருந்தார். 2008ஆம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த ஆடம்பர மாளிகையின் விலை 117 மில்லியன் பவுண்டுகள்.. இந்த ஆடம்பர மாளிகையைத்தான் லட்சுமி மிட்டல் விற்பனை செய்யப் போகிறாராம்

லண்டனில் எங்கு உள்ளது?
லண்டனில் கென்சிங்டனில் பேலஸ் கிரீன் என்ற பெயரில்தான் லட்சுமி மிட்டலின் இந்த ஆடம்பர மாளிகை இருக்கிறது..

என்ன காரணம்?
சீனாவுக்கான உருக்கு ஏற்றுமதி கடும் வீழ்ச்சியடைந்ததால் லட்சுமி மிட்டலுக்கு செம பொருளாதார நெருக்கடியாம்.. இதுதான் லண்டன் மாளிகையை விற்பனை செய்யக் காரணமாம்

இப்போது என்ன மதிப்பு?
2008ஆம் ஆண்டு 117 மில்லியன் பவுண்டுக்கு லண்டன் மாளிகையை லட்சுமி மிட்டல் வாங்கியிருந்தாலும் தற்போதைய சந்தை நிலவரப்படி 110 மில்லியன் பவுண்டுதான் போகுமாம்.. 7 மில்லியன் பவுண்டு நட்டமாம்!

மாளிகையின் பரப்பு?
12 படுக்கை அறைகளுடன் கூடிய 14,736 சதுர அடியில் இந்த மாளிகை அமைந்துள்ளது. இதை அமெரிக்காவைச் சேர்ந்த இஸ்ரேல் நாட்டுக்காரர் ஒருவரிடம் இருந்து லட்சுமி மிட்டல் வாங்கியிருந்தார்.

ஒருநாளும் வாழ்ந்தது இல்லை..
117 மில்லியன் பவுண்டுக்கு மாளிகை வாங்கியும் லட்சுமி மிட்டல் ஒருநாளும் இதில் வாழ்ந்தது இல்லை. லட்சுமி மிட்டல் அதே கென்சிங்டனில் 50 மில்லியன் பவுண்டு மதிப்பிலான மாளிகையில்தான் வசித்து வருகிறார்.

மொத்தம் 8 மாளிகைகள்
லட்சுமி மிட்டலுக்கு மொத்தம் 8 மாளிகைகள் இருக்கின்றன. இதில் இந்திய மாளிகைகள் இரண்டும் அடக்கம். மற்றவை இங்கிலாந்தில் இருக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications