For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகாவில் கனமழை எதிரொலி: மேட்டூருக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Mettur Dam
சென்னை: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது இதனால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பருவமழை பொய்த்ததாலும், கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விடாததாலும், கடந்த 3 மாதங்களாக மேட்டூர் அணைக்கு 100 கன அடிக்கும் குறைவான தண்ணீரே வந்து கொண்டிருந்தது.

இதனால் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு மேட்டூர் அணை வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பண்ணவாடி, கொளத்தூர், பாலாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று 222 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 1,600 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 18.75 அடியாக அதிகரித்துள்ளது.

குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 600 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 3.75 டி.எம்.சி.யாக உள்ளது.

குறுவை சாகுபடிக்காக பருவமழையை எதிர்நோக்கியுள்ள காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

English summary
The inflow to Mettur Dam has increased due to heavy rains in the catchment areas of Cauvery. For the past few days the Mettur Dam looked very dry and drained but now the people are happy due to the increased inflow of water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X