For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரில் 7 மாதமாக வீட்டு மாடியில் மகனால் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 90 வயது முதியவர் மீட்பு

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் சுத்தமாக இல்லாததால் மகனால் வீட்டில் சங்கிலியால் கட்டிபோட்டு வைக்கப்பட்டிருந்த 90 வயது முதியவர் போலீசாரால் மீட்கப்பட்டார்.

பெங்களூர் பனஷங்கரி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் குமார் ஷெட்டி(90). அவரை அவரது மகன் வீட்டு மாடியில் கடந்த 7 மாதங்களாக சங்கிலியால் கட்டிப் போட்டு வைத்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் நேற்று முதியவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

போலீசார் முதியவரின் மகனிடம் விசாரித்தபோது அவர் கூறுகையில், என் தந்தை குளிக்க மாட்டார். அசுத்தமாக இருந்தார். அதனால் சங்கிலியால் கட்டிப்போட்டு வைத்தேன் என்றார்.

இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. முதியவரிடம் வாக்குமூலம் வாங்க போலீசார் காத்துக் கொண்டிருக்கின்றனர். முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை தான் பெங்களூரில் பெற்றோரால் வீட்டில் ஒரு அறைக்குள் கடந்த 5 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்ட 35 வயது பட்டதாரி பெண்ணை போலீசார் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bangalore police on wednesday rescued a 90-year old man who was chained on the terrace of his Banashankari house in Bangalore for the past 7 months by his son for being unclean.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X