லண்டன்- அம்மாவுடன் ஷாப்பிங் போன இந்திய சிறுமி மாயம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: லண்டனில் தனது தாயாருடன் ஷாப்பிங் போன 17 வயது இந்திய சிறுமி திடீரென மாயமானார்.இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.

இமான் ஷா என்ற அந்த சிறுமி தனது குடும்பத்துடன் விடுமுறைக்காக லண்டன் வந்திருந்தார். ஜூன் 10ம் தேதி அவர் தனது குடும்பத்தினருடன் தாயகம் திரும்புவதாக இருந்தது.

ஆனால், அன்றைய தினம் பிற்பகலில் தனது தாயாருடன் ஷாப்பிங் போனவர் காணாமல் போய் விட்டார். ஆக்ஸ்போர்ட் தெருவில்தான் இமான் ஷா காணாமல் போயுள்ளார். இதுகுறித்து மெட்ரோபாலிட்டன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிறுமி குறித்த தகவல் தெரிந்தோர் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன தினத்தன்று இமான் ஷா கையில் செல்போன் எதுவும் இல்லை. கொஞ்சம் பணம் மட்டுமே இருந்ததாம். இமான் ஷாவின் தந்தை பெயர் தன்வீர் ஷா. இவர் இந்தியாவில் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+