For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயிலில் உங்க சீட்டுக்கே இனி நீங்கள் விரும்பும் உணவு வந்து சேரும்!!

By Mathi
Google Oneindia Tamil News

Three Indians on board, Asiana Airlines flight crashes in US
டெல்லி: நாட்டின் ரயில்வே துறை ஒவ்வொரு கட்டமாக தம்மை மாற்றிக் கொண்டு வருகிறது. நீண்ட வரிசையில் பல மணி நேரம் கால்கடுக்க நின்று டிக்கெட் எடுத்த காலம் மலையேறி இ டிக்கெட்டும் போய் எம்.டிக்கெட் என ஜஸ்ட் மொபைல் மெசேஜ் போதும் என்றாகிவிட்டது..

இப்படியான மாற்றத்தை தற்போது உணவு விஷயத்திலும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது ரயில்வே நிர்வாகம். பொதுவாக ரயில்களில் இருக்கும் உணவு வகைகளைத்தான் சாப்பிட வேண்டியதிருக்கும். இதில் மாற்றத்தை கொண்டு வருகிறது ரயில்வே நிர்வாகம்..

உங்களுக்கு என்ன மாதிரியான உணவு வேண்டும் என்பதை ரயில்வேயின் இணையதளத்தில் தேர்வு செய்து உங்கள் பயண விவரங்களை பதிவு செய்துவிட்டால் போதுமாம்! பிரியாணியோ பீசாவோ நீங்க உங்க சீட்டில் உட்காரும்போது உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிடுமாம்.. உணவு உங்களிடம் வந்து சேர்ந்த பிறகு கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாமாம்..

இப்பொழுது டெல்லி- ஜம்மு, டெல்லி- அமிர்தசரஸ் சேவை மார்க்கங்களில் இந்த புதிய முறையை செயல்படுத்திப் பார்க்கவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறதாம். பின்னர் படிப்படியாக அனைத்து ரயில்களிலும் இது விரிவாக்கம் செய்யப்படுமாம்!

ராஜதானிகள், தூரந்தோ மற்றும் சதாப்தி ஆகியவற்றில் உணவுக்கும் சேர்த்தே கட்டணம் வசூலிக்கப்படுவதால் இவற்றில் இந்த திட்டம் செயல்படுத்தமாட்டோம் என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்!

English summary
Indian railway ministry has changed a lot. Now you can book your pizza or pasta through Internet before boarding a train in India, and food will be delivered at your seat during the journey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X