For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புத்தகயா: குண்டு வெடித்த இடத்தில் அமைதி நிலவ பிராத்தனை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

புத்தகயா: அமைதியும் சாந்தமும் நிறைந்த இடமான மகாபோதி ஆலயத்தில் வெடித்த குண்டு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான்.

பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி ஆலயம் அமைதியை விரும்புபவர்களுக்கான ஆலயம். கருணையும், அமைதியையும் போதித்த புத்தர் அங்கு இன்னமும் வாழ்வதாகவே நம்பி அங்கு பல்வேறு நாட்டினரும் வருகை தருகின்றனர்.

வெளிநாட்டினரின் உயிருக்கு குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்தான் உலகம் முழுவதும் உள்ள பௌத்தர்களை புத்தகயாவின் பக்கம் திருப்பியுள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் சக்தி குறைந்த குண்டுதான் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால்தான் அதிக அளவில் உயிர்சேதமோ, மகா போதி கோவிலுக்கு பெரிய அளவிலான சேதமோ ஏற்படவில்லை. எனினும் வெடிக்காத சக்திவாய்ந்த குண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியம் மிக்க புனித தலமான மகா போதி ஆலயத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தாலும் அரசியல் கட்சியினரிடையேயான சண்டைகளும் ஆரம்பமாகியிருக்கிறது.

என்.எஸ்.ஜி அதிகாரிகள்

என்.எஸ்.ஜி அதிகாரிகள்

குண்டு வெடிப்பு நிகழ்ந்த மகாபோதி ஆலயத்திற்குள் உள்ள பொருட்களை என்.எஸ்.ஜி அதிகாரிகள் சேகரித்து சோதனை செய்தனர்.

இந்தியன் முஜாகிதீன்

இந்தியன் முஜாகிதீன்

இந்த குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குண்டு வெடித்த இடங்களை ஆய்வு செய்த நிபுணர்கள், ஆர்டிஎக்ஸ் வகை குண்டு என்றும், அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

காலை 5.30 மணி

காலை 5.30 மணி

150 முதல் 200 கிராம் வரை அமோனியம் நைட்ரேட் ஒவ்வொரு குண்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. காலை 5.30 மணிக்கு நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பில் இரண்டு புத்த பிட்சுகள் காயமடைந்துள்ளனர்.

மகா போதி ஆலயம்

மகா போதி ஆலயம்

ஞாயிறு நிகழ்ந்த குண்டு வெடிப்பிற்குப் பின்னர் திங்களன்று மிக தாமதமாகவே திறக்கப்பட்டது மகா போதி ஆலயம். சிறப்பு பிரார்தனைகள் செய்யப்பட்டன.

சுத்தம் செய்யும் ஊழியர்கள்

சுத்தம் செய்யும் ஊழியர்கள்

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடம் ஊழியர்களால் சுத்தம் செய்யப்படுகிறது.

புனித நீர் தெளித்து

புனித நீர் தெளித்து

குண்டு வெடிப்பு நிகழ்ந்த மறுதினம் மகா போதி ஆலயத்திற்குள் புனித நீர் தெளிக்கப்பட்டது.

புத்த பிட்சுகள் பிராத்தனை

புத்த பிட்சுகள் பிராத்தனை

குண்டு வெடிப்பு நிகழ்ந்த மறுநாள் சிறப்பு பிராத்தனை செய்யும் புத்த பிட்சுகள்

கடுமையான பாதுகாப்பு

கடுமையான பாதுகாப்பு

குண்டு வெடிப்பிற்குப் பின்னர் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் மகாபோதி ஆலயம் கொண்டு வரப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் சிபிஆர்எப் ஜவான்கள் உச்சக்கட்ட பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம்

போராட்டம்

தொடர் குண்டுவெடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் சமூக ஆர்வலர்கள்

இஸ்லாமியர்களுடன் இணைந்து

இஸ்லாமியர்களுடன் இணைந்து

புத்தகயாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்து நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் புத்த பிட்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் புத்த பிட்சுகளுடன் இஸ்லாமியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அமைதி நிலவ வேண்டும்

அமைதி நிலவ வேண்டும்

இனியாவது அமைதியும், சாந்தியும் நிலவவேண்டும் என்று மண்டியிட்டு பிராத்தனை செய்யும் புத்த துறவி.

English summary
One of the bombs that exploded at the Bodh Gaya temple compounds on early Sunday morning was planted 20-feet high, on a statue of Gautam Buddha, forensic analysts said on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X