For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவர் ஜெயந்தி வன்முறை: தே.பா சட்டத்தில் இருந்து விடுதலையானவர்கள் மீண்டும் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: தேவர் ஜெயந்தி வன்முறை வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதான 7 பேர் நேற்று விடுதலையான நிலையில் அவர்களை மதுரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை கைது செய்த போலீசார் தேசிய பாதுக்காப்பு சட்டத்தில் சேலம் சிறையில் அடைத்தனர்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தங்களை கைது செய்ததை ரத்து செய்யக் கோரி குற்றவாளிகள் 7 பேரும் வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து அவர்கள் மீதான தே.பா சட்டத்தை ரத்து செய்யக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சேலம் சிறையில் இருந்த 7 பேரும் ஜாமீனில் விடுதலையானவர்கள்.

அவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதியில் பெருங்குடியில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை பெருங்குடி போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

English summary
Thevar Jayanthi Volence case accused were released from Salem jail on yesterday, and they were arrested today by Madurai police. The petrol bomb attack on youth returning from Thevar Jayanthi celebrations in Pasumpon on October 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X