For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் வரை அறப்போர் தொடரும்: வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

We are staging a battle and we will continue Says Vaiko
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் வரை என்னுடைய அறப்போர் தொடரும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் டெர்லைட் ஆலை குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த ஆலையில் மார்ச் 23 ஆம் தேதி நச்சுப் புகை வெளியேறி தூத்துக்குடி மக்கள் பாதிக்கப்பட்டு, தொடர் போராட்டங்கள் நடைபெற்று, மார்ச் 29 ஆம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது. அதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கு, டெல்லியில் உள்ள பசுமைத் தீர்ப்பாய முதன்மை அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இருதரப்பு வாதங்களும் முடிந்த பின், ஆலையை இயக்குவதற்கும் அனுமதித்து, சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை நியமித்தது. அந்தக் குழுவினுடைய அறிக்கை இன்று தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சார்பில், வழக்கறிஞர் 15 ஆம் தேதி வரை தான் ஆலைக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆலையைத் தொடர்ந்து இயக்க முடியாமல் போய்விடும் என்று கூறியதற்கு, தீர்ப்பாயத்தின் நீதிபதி சுதந்திரகுமார் அவர்கள் வரும் 15 ஆம் தேதி இந்தத் தீர்ப்பாயத்தில் விசாரைண நடைபெறும். நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வைகோ பேசியதாவது:

ஸ்டெர்லைட் ஆலைகுறித்து எனது வாதங்களை ழுமுமையாக ஏற்கனவே முன்வைத்துவிட்டேன். தீர்ப்பாயத்தின் மனநிலையையும் உணர்ந்துகொண்டேன். தீர்ப்பாயத்தினுடைய இறுதித் தீர்ப்புக்குப் பின் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்குமானால், ஆலையை அகற்றுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு உள்ளிட்ட எனது அறப்போர் தொடரும்.

ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது மறு ஆய்வு மனு தாக்கல் செய்து இருக்கிறேன். இவ்வாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

English summary
We are staging a battle and we will continue to do so. I will file an appeal in the Supreme Court”, a party statement quoted Vaiko as having told reporters in New Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X