For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய பொருளாதார வளர்ச்சி 6%-ல் இருந்து 5.8% ஆக குறையும்: ஆசிய வளர்ச்சி வங்கி

By Mathi
Google Oneindia Tamil News

ADB cuts India’s 2013 growth forecast to 5.8% from 6%
டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 2013-ல் தற்போதைய 6%-ல் இருந்து 5.8% ஆக குறையும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், மந்தமான முதலீடு, பலவீனமான தொழில்துறை நடவடிக்கைகள், சீர்திருத்த நடவடிக்கைகளில் தேக்கம் ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சியானது 6%-ல் இருந்து 5.8% ஆக குறையும்.

அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முந்தைய செலவினங்கள், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான அமெரிக்காவின் ஆதரவு ஆகியவற்றால் வளர்ச்சி காணப்படும். இதனால் 2014ஆம் ஆண்டு பழைய நிலைமையான 6.5% என்ற அளவிலேயே பொருளாதார வளர்ச்சி இருக்கும்.

2013ஆம் ஆண்டு சீனாவின் பொருளாதர வளச்சியானது 7.7%-ல் இருந்து 7.5% ஆக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Asian Development Bank (ADB) has pared its 2013 growth projection for India to 5.8% from 6%, holding that slowing investment, weak industrial activity and plodding progress on reforms are weighing on the economy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X