For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நண்பரின் சிகிச்சைக்கு ஓடோடி வந்து உதவிய டோணி

By Siva
Google Oneindia Tamil News

Dhoni extends helping hand to ailing friend
ராஞ்சி: கிரிக்கெட் வீரர் டோணி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது நண்பரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்துள்ளார்.

டோணி ஹெலிகாப்டர் ஷாட்டை கண்டுபிடிக்க உதவியவர் அவரது நண்பரும், முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரருமான சந்தோஷ் லால். அவருக்கு கணைய வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இது குறித்து அறிந்த டோணி லாலை ராஞ்சியில் இருந்து விமான ஆம்புலன்ஸ் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்ல உதவி செய்தார்.

மேலும் டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள லாலுக்கு தேவையான உதவியை செய்ய டோணி முன்வந்துள்ளார். லாலை அவ்வப்போது தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

லாலுக்கு கணைய வீக்கம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லால் டோணியுடன் சேர்ந்து ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடியவர். மேலும் அவரும், டோணியும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள்.

லாலுக்கு டோணி தவிர அவருடைய பிற நண்பர்களும் உதவ முன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India captain Mahendra Singh Dhoni was extending all possible help to the inventor of his famous helicopter shot and one of his close childhood friend Santosh Lal, who has been diagnosed with acute pancreatitis and was airlifted to Delhi today for treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X