For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அய்யய்யோ, என் அட்ரஸ் மற்ந்து போச்சே..: பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பிய கைதியின் பரிதாப நிலை

Google Oneindia Tamil News

மும்பை: 12 வருட பாகிஸ்தான் சிறை வாசத்திற்குப் பிறகு இந்தியா திரும்பிய கைதி ஒருவர் தனது அட்ரஸ் மறந்து போனதால், தொண்டு நிறுவனம் ஒன்றின் கடந்த ஓராண்டாக தங்கியுள்ளார். கடந்தாண்டு பிப்ரவரி 16ந்தேதி பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை ஆனவர் முகம்மது அஹமத் என்ற 45 வயது மனிதர். இவர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் பாகிஸ்தான் சிறையில் வாடியுள்ளார். ஆனால், விடுதலையாகி தாயகம் திரும்பிய அவருக்கு தனது வீட்டிற்கு செல்லும் அட்ரஸ் மறந்து விட்டதாம். அதனால் அவர் அமிர்தசரஸ்-ல் உள்ள ரெட் கிராஸ் பவனில் தங்க வைக்கப் பட்டார்.

பாகிஸ்தான் சிறை ஆவணப்படி, அவரது வீடு உத்தரபிரதேசத்தில் உள்ள மோராட்பாத்தில், மீர்காஞ்ச்-ல் அமைந்திருப்பதாக உள்ளது. அவரது தந்தையின் பெயர் ஆசிஷ் அஹமத் எனவும் ஆவணங்கள் சொல்கிறதாம்.

ஆனால், அங்குள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது இது குறித்து மேற்கொண்டு விபரங்கள் ஏதும் கிடைக்கவில்லையாம். சற்று மனநிலை பாதித்த நிலையில் உள்ள அஹமத் தனது உறவினரைப் சந்திக்க பாகிஸ்தான் சென்ற போது, அங்குள்ள போலீசால் கைது செய்யப்பட்டு 12 வருடங்கள் சிறையில் கழித்துள்ளார்.

தனக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகக் கூறும் அஹமது, தனது சொந்த வீட்டைத் தேடி இன்னமும் அலைந்து கொண்டு தான் இருக்கிறார்.

English summary
Mohammad Ahmed, 45, returned to India on February 16, 2012, after reportedly spending 12 years in a jail in Pakistan. But he is yet to meet his family. For over a year now, he has been staying at the Red Cross Bhawan in Amritsar because he cannot remember his address, and his family in Uttar Pradesh has not been traced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X