For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காண்டாமிருகம் கேட்ட ஜெயலலிதா: குட்டி போட்டட்டும் தருகிறோம் என்கிறது அஸ்ஸாம் அரசு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு முதல்வர் ஜெயலலிதா கேட்ட காண்டாமிருகத்தை தற்போதைக்கு அஸ்ஸாம் அரசு தரப் போவதில்லை.

TN has to wait to get a rhinoceros from Assam
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த காண்டாமிருகம் கடந்த 1989ம் ஆண்டு இறந்தது. அதன் பிறகு அந்த பூங்காவில் இன்று வரை ஒரு காண்டாமிருகம் கூட இல்லை. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா அண்மையில் வண்டலூர் பூங்காவுக்கு சென்றார். அப்போது அவரிடம் பூங்காவில் பல ஆண்டுகளாக ஒரு காண்டாமிருகம் கூட இல்லாதது குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜெயலலிதா காண்டாமிருகம் கேட்டு அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய்க்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் வனத்துறை அமைச்சர் ஆனந்தன் வண்டலூர் பூங்காவில் ஆய்வு நடந்த வந்தார்.

அப்போது அவரிடம் காண்டாமிருகம் குறித்து கேட்டதற்கு அவர் கூறுகையில்,

கவுஹாத்தி உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு காண்டாமிருகம் அளிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா கேட்டிருந்தார். அங்கு தற்போது 6 காண்டாமிருகங்கள் மட்டுமே இருப்பதால் அவற்றின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிக்கும்போது தமிழகத்திற்கு காண்டாமிருகம் அளிப்பதாக அஸ்ஸாம் அரசு தெரிவித்துள்ளது என்றார்.

English summary
Minister Anandan told that Assam government said that TN has to wait for some time to get a rhino from them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X