For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

1ரூபாய் சாப்பாடு… மாத்தி போட்டுட்டாங்க… ஆனாலும் மன்னிப்பு கேட்ட பரூக் அப்துல்லா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Farooq Abdullah says 'comment on cost of a meal misconstrued'
டெல்லி: 1ரூபாய்க்கு வயிறார சாப்பிடமுடியும் என்று தான் கூறவில்லை என்றும் தன்னுடைய பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார் மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா.

கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்த மத்திய திட்டக்குழு, கிராமங்களில் ஒரு நாளைக்கு ரூ.27.20க்கு மேலும், நகரங்களில் ரூ.33.33க்கு மேலும் வருமானம் ஈட்டுபவர்கள் ஏழைகளாகக் கருதப்பட மாட்டார்கள் எனக் கூறியிருந்தது.

மத்திய திட்டக்குழுவின் இந்த அறிவிப்புக்கு பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கொதித்தெழுந்து கடும் கண்டனம் தெரிவித்தன.,

திட்டக்குழுவின் அறிவிப்பை நியாயப்படுத்தும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா,"ரூ.1க்கும் வயிறு நிரம்ப சாப்பிட முடியும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, தாம் கூறியது திரித்துக் கூறப்பட்டுவிட்டதாகவும், அதே சமயம் தனது கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

இதேபோல் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜ் பப்பர், மும்பை நகரில் இப்பொழுது கூட 12 ரூபாய்க்கு என்னால் முழு சாப்பாடு வாங்கி சாப்பிட முடியும் கூறியது கொதிப்பை ஏற்படுத்தவே அவரும் நேற்று மன்னிப்புக் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Minister of New and Renewable Energy Dr. Farooq Abdullah on Friday clarified his statement on food being available at Re 1, and said that his comments have been taken out of context.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X