For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவிகிதமாக உயரும்… நிதியமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மானாமதுரை: நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அடுத்த ஆண்டிற்குள் 6 சதவிகிதமாக உயரும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடம் தொடர்ந்து வகித்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்தியன் வங்கியின் 2110வது கிளையை திறந்து வைத்தார். இந்தியன் வங்கி தலைவர் பசின் அனைவரையும் வரவேற்றார். செயல் இயக்குநர்கள் ராஜ், ரிஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

GDP to touch 6% Says P.Chidambaram

விழாவில் ப.சிதம்பரம் பேசியதாவது:

நாட்டில் 80லட்சம் சுயஉதவி குழுக்களுக்கு 86கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் கல்வி கடனாக 50ஆயிரம் கோடி ரூபாய் 25லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

GDP to touch 6% Says P.Chidambaram

கச்சா எண்ணையின் விலை பேரலுக்கு 105 டாலராக உயர்ந்து விட்டது. 100டாலருக்குள் இருந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும், கச்சா எண்ணை இறக்குமதியும் 70சதவிகிதமாக உயர்ந்து விட்டது.

பொருளாதார வளர்ச்சியில் மற்ற நாடுகள் பின்தங்கியுள்ள நிலையில் இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக தொடர்நது 2வது இடத்தில் உள்ளது. 9சதவிகிதமாக இருந்த வளர்ச்சி 5ஆக உள்ளது அடுத்தாண்டிற்குள் 6சதவிகிதமாக உயரும் என நம்புகிறேன்.

இதனைத் தொடர்ந்து மிளகானூர் கிராமத்தில் ஓரியண்டல் வங்கியின் 2010வது கிளையை திறந்து வைத்து பேசினார். அப்போது தமிழகத்தில் நெல்லிற்கு 1350ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 9வருடஙகளுக்கு முன் 650ஆக மட்டுமே இருந்தது. தற்போது 1350ரூபாய் வழங்கபடுகிறது என்றார்.

English summary
Despite the weak growth in the January-March quarter and lack of any visible spark in the first couple of months of the new fiscal, economists are still confident that growth will recover to around 6% in the current financial year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X