For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரால் மீ்னிலிருந்து இட்லி பொடி... நெல்லையில் நூதன கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை நீர்வள உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் விரால் மீனை பயன்படுத்தி பிஸ்கட், ஊறுகாய் தயார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மீன் இட்லி பொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விரால் மின் வளர்ப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு பாளையில் சேவியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.

கண்காட்சியில் விரால் மீனில் இருந்து தயாரிக்கப்பட்ட இனிப்பு மற்றும் கார பிஸ்கட், ஊறுகாய் உள்ளிட்ட உணவு பொருட்கள் இடம் பெறறிருந்தன. மேலும் முதல் முறையாக இட்லி பொடியும் தயாரிக்கப்பட்டு மாதிரியாக வைக்கப்பட்டிருந்தது.

இந்த இட்லி பொடி சாதாரண வெப்ப நிலையில் 4 வாரமும், குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்தால் 1 மாதமும் கெடாமல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

கருத்தரங்கில் பேசியவர்கள் விரால் மீன் மருத்துவ குணம் கொண்டது. காயத்தை ஆற்றும் குணம் கொண்டது. மகப்பேறு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்கள் உள்காயம் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் பெற விரால் மீன் எசன்ஸ் பயன்படுகிறது.

காயம் ஏற்படு்ம்போது ரத்தம் உறைவதற்கும், காயத்தை ஆற்றுவதற்கும் தேவைப்படும் அமில பொருட்கள் விரால் மீன்களில் உள்ளன.மூட்டு சம்பந்தமான நோய்களில் இருந்து நிவாரணம் பெற உலகம் முழுவதும் விரால் மீனை உணவாக பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவி்த்தார்.

English summary
Nellai institution has come with a modern idli podi from Butter fish.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X