For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காரைக்கால் மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல்… மீனவர்கள் அதிர்ச்சி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காரைக்கால்: காரைக்கால் மீனவர்களை இன்று இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலை சேர்ந்த 45 மீனவர்கள் இன்று காலை 11 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். திருமலைராயன்பட்டினம் அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்களைத் தாக்கியதாக தெரிகிறது.

மேலும், துப்பாக்கி காட்டியும் மிரட்டி உள்ளனர். அதோடு, மீனவர்களின் வலையை இந்திய கடலோர காவல் படையினர் அறுத்து எறிந்துள்ளனர். இதனால், அச்சமடைந்த மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பியுள்ளனர்.

இதுநாள் வரை இலங்கை கடற்படையினர்தான் தாக்குதல் நடத்தி வந்தனர் இந்த நிலையில் இந்திய கடற்படையினர் நம்நாட்டு மீனவர்கள் மீனவர்கள் மீதே தாக்குதல் நடத்தி விரட்டியுள்ளனர். இந்திய கடலோர காவல் படையினரின் இந்த செயல் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Firing gun shots at a mechanised boat carrying Karikkal fishermen and injuring one occupant, Indian Navy personnel allegedly beat up 45 fishermen of Tirumalairaya pattinam village near here in mid-sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X